Recent Post

6/recent/ticker-posts

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவாவில் ரூ. 7,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் / In Jabua, Madhya Pradesh, The Prime Minister dedicated various development projects worth 7,300 crores to the country and laid foundation stones for new projects.

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவாவில் சுமார் ரூ.7,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

இன்றைய இந்த வளர்ச்சித் திட்டங்கள் இப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும். அப்பகுதியில் குடிநீர் விநியோகத்தை வலுப்படுத்தும். 

அதே நேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் சாலை, ரயில், மின்சாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கும் இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் ஊக்கமளிக்கும். 

குறிப்பாக பின்தங்கிய பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பெண் பயனாளிகளுக்கு ஆஹார் அனுதான் எனப்படும் ஊட்டச்சத்து மேம்பாட்டுக்கான மாதாந்திர தவணைத் தொகையைப் பிரதமர் வழங்கினார். 

ஸ்வாமித்வா திட்டத்தின் பயனாளிகளுக்கு 1.75 லட்சம் அதிகார் அபிலேக் எனப்படும் உரிமைப் பதிவுகளை அவர் வழங்கினார். பிரதமரின் முன்மாதிரி கிராமத் திட்டத்தின் (ஆதர்ஷ் கிராம திட்டம்) கீழ் 559 கிராமங்களுக்கு ரூ.55.9 கோடியை அவர் வழங்கினார்.

வளர்ச்சியின் பயன்கள் பழங்குடியின சமூகத்தினரைச் சென்றடைவதை உறுதி செய்வது மத்திய அரசின் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாகும். 

சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் பழங்குடியின சமுதாயத்தில் பெரும்பகுதியினர் அரசுத் திட்டப் பலன்களைப் பெற முடியவில்லை. 

இதன் அடிப்படையில், இந்தப் பிராந்தியத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும் பல்வேறு திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel