இசைத்துறையில் மிக முக்கியமான விருதாக கிராமி விருது கருதப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான 66-வது கிராமி இசை விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
இதில், சிறந்த குளோபல் மியூசிக் ஆல்பத்திற்கான பிரிவில், இந்தியாவை சேர்ந்த சக்தி இசைக்குழுவிற்கு கிராமி விருது கிடைத்துள்ளது.
தி மொமண்ட் என்ற ஆல்பத்திற்காக விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த இசைக்குழுவில், உஸ்தாத் ஜாகீர் உசேன், செல்வகணேஷ், கணேஷ் ராஜகோபாலன், ஷங்கர் மகாதேவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
0 Comments