Recent Post

6/recent/ticker-posts

கூட்டுறவுத் துறைக்கான பல்வேறு முக்கிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார் / The Prime Minister inaugurated and laid the foundation stones of various important schemes for the cooperative sector

கூட்டுறவுத் துறைக்கான பல்வேறு முக்கிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார் / The Prime Minister inaugurated and laid the foundation stones of various important schemes for the cooperative sector

பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் கூட்டுறவுத் துறைக்கான பல்வேறு முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, அவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

11 மாநிலங்களில் உள்ள 11 தொடக்க வேளாண் கடன் சங்கங்களில் (பிஏசிஎஸ்) மேற்கொள்ளப்படும் 'கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின்' முன்னோடித் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் கிடங்குகள் மற்றும் இதர வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக நாடு முழுவதும் கூடுதலாக 500 பிஏசிஎஸ் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இந்த திட்டம் பிஏசிஎஸ் கிடங்குகளை உணவு தானிய விநியோகச் சங்கிலியுடன் தடையின்றி ஒருங்கிணைப்பதையும், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும், நபார்டின் ஆதரவுடனும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (என்.சி.டி.சி) கூட்டு முயற்சியுடனும் நாட்டில் பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

வேளாண் உள்கட்டமைப்பு நிதி, வேளாண் சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பு போன்ற தற்போதுள்ள பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த முயற்சி செயல்படுத்தப்படுகிறது. 

இதில் பங்கேற்கும் பிஏசிஎஸ் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மேற்கொள்வதற்கான மானியங்கள் மற்றும் வட்டி மானிய நன்மைகளைப் பெற உதவுகிறது.

கூட்டுறவுத் துறைக்கு புத்துயிர் அளித்தல் மற்றும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட "கூட்டுறவு மூலம் செழிப்பு" என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து, நாடு முழுவதும் உள்ள 18,000 பிஏசிஎஸ்-ஐ கணினிமயமாக்கும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel