Recent Post

6/recent/ticker-posts

மத்திய மின்துறை வெளியிட்ட 2022-23 ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் / Rank list for the year 2022-23 published by Central Power Department

மத்திய மின்துறை வெளியிட்ட 2022-23 ஆண்டுக்கான தரவரிசை பட்டியல்
Rank list for the year 2022-23 published by Central Power Department

மத்திய மின்துறை வெளியிட்ட 2022-23 ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் / Rank list for the year 2022-23 published by Central Power Department

TAMIL

மத்திய மின்துறை வெளியிட்ட 2022-23 ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் / Rank list for the year 2022-23 published by Central Power Department: மத்திய மின்துறை 2022-23-ம்நிதியாண்டுக்கான 53 மின்விநியோக நிறுவனங்களின் நிதி நிலைமை, செயல்திறன் உள்ளடக்கிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், தமிழ்நாடு மின்வாரியம் 50-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் 2-க்கும் மேற்பட்ட மின்விநியோக நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் தமிழ்நாடு மின்வாரியத்தின் துணை நிறுவனமான மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மட்டுமே அந்தப் பணிகளை மேற்கொள்கிறது.

மத்திய மின்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள மின்விநியோக நிறுவனங்களின் செயல்திறன், நிதி நிலைமை போன்றவற்றை ஆராய்ந்து ஆண்டுதோறும் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் தமிழக மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 50-வது இடத்தைப் பிடித்து 'சி மைனஸ்' என்ற கிரேடில் உள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தின் மின்சார விற்பனைக்கும், வருவாய்க்கும் உள்ள இடைவெளி ரூ.1.06 கோடியாக உள்ளது. மேலும், மின்கட்டண வருவாயை தாமதமாக ஈட்டுவது, மின்கொள்முதலுக்கு அதிகம் செலவுசெய்வது உள்ளிட்டவை காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தரவரிசைப் பட்டியலில் மகாராஷ்டிர மாநிலத்தில் தனியார் துறை மின்னுற்பத்தி நிறுவனமான அதானி எலக்ட்ரிசிட்டி நிறுவனம் முதலிடத்திலும், குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள டோரண்ட் பவர் நிறுவனம் 2-வது இடத்தையும், அகமதாபாத்தில் உள்ள டோரண்ட் பவர் நிறுவனம் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

ENGLISH

Rank list for the year 2022-23 published by Central Power Department: The Central Electricity Department has released a ranking list of 53 power distribution companies for the financial year 2022-23 that includes financial status and performance. In this, Tamil Nadu Electricity Board has been ranked 50th.

Some states like Andhra Pradesh and Gujarat have more than 2 power distribution companies. In Tamil Nadu, only Minnupadthi and Parimana Kazhagam, a subsidiary of Tamil Nadu Power Board, undertakes such works.

The Union Ministry of Power examines the performance, financial condition, etc. of power distribution companies across the country and publishes an annual ranking list.

Accordingly, the rank list for the year 2022-23 has been published. Tamil Nadu Electricity and Distribution Corporation is ranked 50th in the list and has a grade of 'C minus'.

The gap between Tamil Nadu Power Board's electricity sales and revenue is Rs.1.06 crore. Also, late collection of electricity tariff revenue and high expenditure on electricity purchase have been reported as reasons.

Adani Electricity, a private sector power company in Maharashtra, has topped the list, followed by Surat-based Torrent Power in Gujarat and Ahmedabad-based Torrent Power in third place.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel