Recent Post

6/recent/ticker-posts

இந்தியா மங்கோலியா இடையே 12-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் / 12th Joint Working Group meeting between India and Mongolia

இந்தியா மங்கோலியா இடையே 12-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் / 12th Joint Working Group meeting between India and Mongolia

இந்தியா - மங்கோலியா பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையிலான 12-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் 2024 மே 16-ம் தேதி தொடங்கியது. 

இந்தக் கூட்டத்திற்குப் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு அமிதாப் பிரசாத், மங்கோலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரிகேடியர் ஜெனரல் கன்குயக் தவக்டோர்ஜ் ஆகியோர் கூட்டாகத் தலைமை வகித்தனர். மங்கோலியாவுக்கான இந்திய தூதர் அதுல் மல்ஹாரி கோட்சுர்வே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பல்வேறு இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பு முன்முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து அவர்கள் ஆய்வு செய்ததுடன், ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதித்தனர். தற்போதைய புவிசார் அரசியல் சூழல்கள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel