கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே-26) அன்று உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் பெண்கள் வால்ட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாற்றை சாதனையை நிகழ்த்தினார் இந்தியாவின் வீராங்கனையான தீபா கர்மாகர் .
ஆசிய சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இது ஆசிய ஜிம்னாஸ்டிக் போட்டியில் தீபா கர்மாகர் வென்ற 2-வது பதக்கமாகும். இதற்கு முன் கடந்த 2015-ல் இதே வால்ட் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடைபெற்ற இந்த இறுதி போட்டியில் தீபா கர்மகர் 13.566 புள்ளிகளை பெற்று தங்கத்தை தட்டி சென்றுருக்கிறார். மேலும், இவரை தொடர்ந்து தென் கொரியாவின் கிம் சன் ஹியாங் 13.466 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கமும், ஜியோ கியோங் பயல் 12.966 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினார்கள்.
தீபா கர்மாகர், இந்த ஆசிய ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தாலும் இந்த ஆண்டு பாரிஸில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவில்லை. 'ஆல்-ரவுண்ட்' பிரிவில் இவர் 46.166 புள்ளிகளை பெற்றதால் 16-வது இடம் பிடித்தார்.
இதன் காரணமாக ஆல்-ரவுண்ட் பிரிவில் 3-வது இடம் பிடித்த பிலிப்பைன்சின் எம்மா மாலாபுயோ 50.398 புள்ளிகளை பெற்று பாரிஸ் ஒலிம்பிக் வாய்ப்பை தட்டிச் சென்றுள்ளார்.
0 Comments