Recent Post

6/recent/ticker-posts

நடப்பு நிதியாண்டில் 7 சதவீதம் ஜிடிபி வளர்ச்சி - ரிசர்வ் வங்கி கணிப்பு / 7 percent GDP growth in current fiscal - RBI forecast

நடப்பு நிதியாண்டில் 7 சதவீதம் ஜிடிபி வளர்ச்சி - ரிசர்வ் வங்கி கணிப்பு / 7 percent GDP growth in current fiscal - RBI forecast

2024-25 ஆண்டுக்கான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.0 சதவிகிதமாக சமச்சீரான அபாயங்களுடன் இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் இருப்பதாகவும் நுண்பொருளியலின் அலகுகள், வலுவான நிதி மற்றும் கார்ப்பரேட் துறைகள் பலத்தில் பொருளாதாரம் செயல்படும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

2023-24 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி அதற்கு முந்தைய ஆண்டின் 7 சதவிகித உயர்விலிருந்து 7.6 சதவிகிதமாக அதிகரித்தது எனக் குறிப்பிட்டுள்ள ஆர்பிஐ வளர்ச்சி முகமாக மூன்றாவது ஆண்டும் 7 சதவிகிதம் உயரும் எனக் குறிப்பிட்டுள்ளது.

அரசின் மூலதன செலவுக்கான உந்துதல் மற்றும் நுகர்வோர், வணிக நிறுவனங்களின் நேர்மறையான போக்கு ஆகியவை மூலதனம் மற்றும் நுகர்வு தேவை அதிகரிப்புக்கு சாதகமாக இருப்பதாக ஆர்பிஐ தெரிவிக்கிறது. மேலும் பணவீக்கம் 2023-24 ஆண்டு சராசரியில் இருந்து 1.3 சதவிகிதமளவுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel