Recent Post

6/recent/ticker-posts

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முதல் தலைவர் நியமனம் / Appointment of first Chairman of GST Appellate Tribunal

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முதல் தலைவர் நியமனம் / Appointment of first Chairman of GST Appellate Tribunal

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சஞ்சய குமார் மிஸ்ராவுக்கு மத்திய நிதி, பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

ஓய்வு பெற்ற நீதிபதி மிஸ்ராவின் நியமனம், ஜிஎஸ்டி தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான ஒரு முக்கியமான அமைப்பான ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் செயல்பாட்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் என்பது மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம், 2017-ன் கீழ் நிறுவப்பட்ட மேல்முறையீட்டு ஆணையமாகும். 

இது முதலாவது மேல்முறையீட்டு அதிகாரியின் உத்தரவுகளுக்கு எதிரான அந்தந்த மாநில / யூனியன் பிரதேசங்கள் ஜிஎஸ்டி சட்டங்களின் கீழ் பல்வேறு மேல்முறையீடுகளை விசாரிக்க உள்ளது. 

ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதலின்படி, புதுதில்லியில் அமையவுள்ள முதன்மை அமர்வையும், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 31 மாநில அமர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது. 

நீதித்துறை உறுப்பினர்கள் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர்கள் நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.

உயர் நீதிமன்றங்களின் சுமையை கணிசமாகக் குறைப்பதுடன், பொருட்கள் மற்றும் சேவைகள் வரி தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான, நியாயமான, பயனுள்ள தீர்வை தீர்ப்பாயம் உறுதி செய்யும். 

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நிறுவப்படுவது இந்தியாவில் ஜிஎஸ்டி அமைப்பின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதோடு, நாட்டில் மிகவும் வெளிப்படையான மற்றும் திறமையான வரி சூழலை வளர்க்கும்.

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முதல் தலைவர், ஓய்வு பெற்ற நீதிபதி மிஸ்ரா ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார்

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel