ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி புதன்கிழமை நடைபெற்றது. அதில் அவர் 82.27 மீட்டரை எட்டி முதலிடம் பிடித்து அசத்தினார்.
முன்னதாக, ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தின் ரோஸி மீனா பால்ராஜ், மகளிருக்கான கம்பு ஊன்றித் தாண்டுதலில் 4.05 மீட்டரை எட்டி தங்கப் பதக்கம் வென்றாா்.
மற்றொரு தமிழரான பரணிகா இளங்கோவன் 4 மீட்டருடன் வெள்ளி பெற, கேரளத்தின் மரியா ஜெய்சன் 3.90 மீட்டருடன் வெண்கலம் வென்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments