ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்த நிலையில் விராத் கோஹ்லி அபாரமாக பேட்டிங் செய்து 76 ரன்கள் எடுத்தார்.
அதன்பின் 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.
இறுதிப் போட்டியில் 76 ரன்கள் எடுத்த விராட் கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் முழுவதும் சிறப்பாக பந்து வீசிய ஜஸ்பிரிட் பும்ரா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த சந்தோஷ தருணத்தோடு இந்திய நட்சத்திர வீரர்கள் ரோகித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவருமே சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.
0 Comments