2024 மே மாதம் வரையிலான மத்திய அரசு கணக்குகளின் மாதாந்தர ஆய்வு ஒருங்கிணைக்கப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
2024 மே மாதம் வரை மத்திய அரசின் மொத்த வருவாய் ரூ.5,72,845 கோடியாக இருந்தது. (2024-25 பட்ஜெட் மதிப்பீட்டின் மொத்த வருவாயில் இது 18.6 சதவீதம்) இதில், வரி வருவாய் (மத்திய அரசுக்கு உரியது) ரூ.3,19,036 கோடி, வரியல்லாத வருவாய் ரூ.2,51,722 கோடி, கடன் வசூல் வருவாய் ரூ.2,087 கோடியாகும்.
இந்தக் காலகட்டத்தில் மத்திய அரசால் மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்ட வரிப்பகிர்வு ரூ.1,39,751 கோடி. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் வழங்கப்பட்டதைவிட ரூ.21,471 கோடி அதிகமாகும்.
2024 மே மாதம் வரை மத்திய அரசின் மொத்த செலவினம் ரூ.6,23,460 கோடி (2024-25 பட்ஜெட் மதிப்பீட்டில் இது 13.1 சதவீதம்). இதில் ரூ.4,79,835 கோடி வருவாய் கணக்கிலானது; ரூ.1,43,625 கோடி மூலதனக் கணக்கிலானது. மொத்த வருவாய் செலவினத்தில் ரூ.1,23,810 கோடி வட்டி வழங்குதலுக்கானது; ரூ.54,688 கோடி பெருமளவிலான மானியங்கள் கணக்கிலானது.
0 Comments