100 நாடுகளுக்கும் மேல் பங்கேற்கும் உக்ரைன் அமைதி மாநாடு ஸ்விட்சா்லாந்தில் சனிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில் வரலாறு படைக்கப்படும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறினாலும், இதில் ரஷியா பங்கேற்காததால் கள நிலவரத்தில் இந்த மாநாடு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்றே கருதப்படுகிறது.
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் 2 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்றுவரும் போா் குறித்து விவாதிப்பதற்காக ஸ்விட்சா்லாந்தின் நிட்வால்ட் பகுதியில் அமைந்துள்ள பா்கன்ஸ்டாக் சுற்றுலா விடுதியில் சா்வதேச மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.
இரு நாள்களுக்கு (ஜூன் 15, 16) நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க ஈக்வடாா், ஐவரி கோஸ்ட், கென்யா, சோமாலியா மற்றும் ஏராளமான ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 50 நாடுகளின் தலைவா்கள், சுமாா் 100 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.
0 Comments