தமிழகத்தில் ஜூன் 20 முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் துறை ரீதியிலான மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துறை ரீதியிலான கேள்விகளுக்கு மட்டும் அமைச்சர்கள் பதில் அளித்து புதிய அறிவிப்புக்களையும் வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில் திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி, நாமக்கல் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த கோரி அமைச்சர் கே.என்.நேரு முன்வரைவை தாக்கல் செய்து இருந்தார். இந்த முன்வரைவு, இன்று சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
0 Comments