பிரதமர் நரேந்திர மோடி - இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோருக்கு இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த ஒப்புதல் ஏற்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே ரயில் போக்குவரத்து, கடல்போக்குவரத்து மேம்பாடு, டிஜிட்டல் டொமைன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சவார்த்தைக்குப் பின், இந்தியா - வங்கதேசம் இடையே பசுமை கூட்டாண்மைக்கான பகிரப்பட்ட கருத்துருக்களில் கையெழுத்திடப்பட்டது.
மேலும், இந்தியா - வங்கதேசம் இடையே ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டண்மை ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தோ - பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியில் வங்கதேசம் இணைவது என்ற முடிவுக்கு இந்தியா வரவேற்பு தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியா, எப்போதும், அண்டை நாடுகளுடனான நட்புறவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் மோடி கூறினார்.
0 Comments