மத்திய மின்சார அமைச்சகத்தின், மத்திய மின்சார ஆணையம், மின்சாரப் பாதுகாப்புக்கான தேசிய பொறியாளர்கள் கூட்டமைப்புடன் இணைந்து, இந்திய தர நிர்ணய அமைவனத்தின் ஆதரவுடன், குறிப்பாக பள்ளி மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட, அகில இந்திய மின்சாரப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஜூன் 26-ந் தேதி ஏற்பாடு செய்தது. அன்றைய தினம் "மின்சாரப் பாதுகாப்பு தினமாக" அனுசரிக்கப்பட்டது.
அடுத்த வாரம் தேசிய மின்சாரப் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மின் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் கருப்பொருள் "பள்ளியிலிருந்து பாதுகாப்பு தொடங்குகிறது" என்பதாகும்.
மின்சார பொதுத்துறை நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகம், தேசிய மின்சாரப் பயிற்சி நிறுவனம், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், மத்திய பொதுப்பணித்துறை உள்ளிட்டவற்றின் சம்பந்தப்பட்ட துறையினர், தில்லியின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மக்களிடையே பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் அகில இந்திய மின்சாரப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments