நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்திருக்கும் நிலையில், மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வாகியிருக்கும் மோடி நாடு முழுவதும் உள்ள 9.3 கோடி விவசாயிகள் பலன் பெறும் திட்டங்களுக்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதியை விடுவிப்பதற்கான கோப்பில்தான் பிரதமர் இன்று முதல் கையெழுத்திட்டுள்ளார்.
தில்லியில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்ட பிரதமர் மோடி, பிரதமரின் விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் 17வது தவணையை விடுவிப்பதற்கான ஆவணத்தில் மோடி கையெழுத்திட்டிருக்கிறார்.
0 Comments