Recent Post

6/recent/ticker-posts

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான 12 வது கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு குழு கூட்டம் / 12th Joint Defense Cooperation Committee meeting between India and UAE

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான 12 வது கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு குழு கூட்டம் / 12th Joint Defense Cooperation Committee meeting between India and UAE

இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டத்தின் 12-வது பதிப்பு ஜூலை 09, அன்று அபுதாபியில் நடைபெற்றது. 

To Know More About - CSL PLASMA PROMO CODE 2024

இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான பரந்த அளவிலான வாய்ப்புகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். கூட்டு ராணுவப் பயிற்சி, பாதுகாப்பு மற்றும் தொழில் ஒத்துழைப்பு, பாடப்பொருள் வல்லுநர் பரிமாற்றம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற துறைகளில் விரிவான விவாதங்கள் நடைபெற்றன.

கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பிராந்திய பாதுகாப்பு நிலவரம் குறித்து இரு தரப்பினரும் விவாதித்ததுடன், பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டினர். 

ஒருவருக்கொருவர் அனுபவம் மற்றும் அறிவிலிருந்து பயனடைய வெவ்வேறு களங்களில் பயணங்களை பரிமாறிக்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. முக்கிய துறைகளில் பயிற்சி வாய்ப்புகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel