சிவகங்கை மாவட்டம், கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில், 10ம் கட்ட அகழாய்வு ஜூன் 18ல் தொடங்கியது. இதுவரை இரு குழிகள் மட்டும் தோண்டப்பட்டதில் பாசிகள், கண்ணாடி மணிகள், தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, மீன் உருவம் பதிக்கப்பட்ட பானை ஓடுகள், சுடுமண் பானைகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. த
ற்போது யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கண்டறியப்பட்டுள்ளது. ஆட்டக்காயின் மேற்பகுதி, 1.3 செ.மீ., விட்டமும், கீழ்பகுதி, 1.5 செ.மீ., விட்டமும், 1.3 செ.மீ., உயரமும் கொண்டதாக உள்ளது.
தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் நடந்த அகழாய்வில் இதுவரை ஐந்து ஆட்டக்காய்கள் பல்வேறு கட்ட அகழாய்வில் கிடைத்துள்ளன. ஆட்டக்காய்கள் அனைத்துமே யானை தந்தத்தால் ஒரே மாதிரியான தோற்றத்தில் உள்ளன.
இவை அனைத்தும் ஒரே கால கட்டத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என, கருதப்படுகிறது. ஆட்டக்காயின் காலத்தை அறிய கார்பன் டேட்டிங் முறையை பயன்படுத்த தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
0 Comments