கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் இருந்து சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. எட்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஜி.எஸ்.டி. வசூல் நடைமுறையின் மாதாந்திர வசூல் குறித்து ஒவ்வொரு மாதமும் அறிவிக்கப்ப்படும்.
உள்நாட்டில் விற்பனை அதிகரித்த காரணத்தால், மே மாத ஜி.எஸ்.டி., வசூல், 10 சதவீதம் அதிகரித்து, ரூ. 1.73 லட்சம் கோடியாக இருந்தது. இந்நிலையில் ஜூன் மாதத்தில் ஜி.எஸ்.டி., வசூல் 7.7 சதவீதத்துடன் ரூ. 1.74 லட்சம் கோடியாக உள்ளது. இதில் சி.ஜி.எஸ்.டி., ரூ. 39,586 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி. ரூ. 33,548 கோடி உள்ளது.
கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு ஜூன் மாதம் 8 சதவீதம் இ.எஸ்.டி. வசூல் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரமல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.2.20 லட்சம் கோடி பதிவு செய்து சாதனை படைத்தது.
0 Comments