76 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவப் படைப்பிரிவில் முக்கியமாக லடாக் சாரணர்களின் ஒரு பட்டாலியன், பிற ஆயுதங்கள் மற்றும் படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ராயல் தாய்லாந்து ராணுவப் பிரிவில் முக்கியமாக 1-வது பட்டாலியன், 4-வது படைப்பிரிவின் 14 காலாட்படை படைப்பிரிவைச் சேர்ந்த 76 வீரர்கள் உள்ளனர்.
மைத்ரீ பயிற்சியின் நோக்கம் இந்தியா மற்றும் தாய்லாந்து இடையே ராணுவ ஒத்துழைப்பை வளர்ப்பதாகும். ஐக்கிய நாடுகள் சாசனத்தின் ஏழாவது அத்தியாயத்தின் கீழ், வனம் மற்றும் நகர்ப்புற சூழலில் கிளர்ச்சி, பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதில் ஒருங்கிணைந்த திறன்களை இந்தப் பயிற்சி மேம்படுத்தும். இந்தப் பயிற்சி, உயர் அளவிலான உடல் தகுதி, கூட்டு திட்டமிடல் மற்றும் கூட்டு உத்திகளில் கவனம் செலுத்தும்.
0 Comments