2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது ஜுலை 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதக்க வேட்டையை தொடங்கியிருக்கும் உலகநாடுகளுக்கு இடையே, 117 பேர் கொண்ட குழுவுடன் பயணித்துள்ள இந்தியா, துப்பாக்கி சுடுதலில் 3 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் தகுதிச்சுற்று கடைசிப்போட்டியில் ஸ்வப்னில் குசலே 590-38x புள்ளிகளுடன் 7வது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
இறுதிப்போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் பங்கேற்ற குசலே 6 சுற்றுகளில் 451.4 புள்ளிகளை எடுத்து 3வது இடம் பிடித்து வெண்கலத்தை தட்டிச்சென்றார்.
0 Comments