இரண்டு நாள் பயணமாக தீவு நாடான ஃபிஜிக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பயணம் மேற்கொண்டாா். அந்நாட்டு தலைநகா் சுவாவில் அவருக்கு 'கம்பானியன் ஆஃப் தி ஆா்டா் ஆஃப் ஃபிஜி' என்ற விருது செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. இது அந்நாட்டின் உயரிய விருதாகும்.
இந்த விருதை குடியரசுத் தலைவா் முா்முக்கு ஃபிஜி அதிபா் கேடோனிவிா் வழங்கினாா். தனக்கு அளிக்கப்பட்ட இந்த கெளரவம், இந்தியா, ஃபிஜி இடையிலான வலுவான உறவின் பிரதிபலிப்பு என்று குடியரசுத் தலைவா் முா்மு தெரிவித்தாா்.
ஃபிஜி பயணத்தைத் தொடா்ந்து நியூசிலாந்து, தென்கிழக்கு ஆசிய நாடான டிமோா்-லெஸ்டே ஆகிய 2 நாடுகளுக்கு முா்மு பயணம் மேற்கொள்ள உள்ளாா். இந்திய குடியரசுத் தலைவா் ஒருவா் ஃபிஜி மற்றும் டிமோா்-லெஸ்டேக்கு செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments