Recent Post

6/recent/ticker-posts

பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves implementation of Prime Minister's Rural Housing Scheme

பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves implementation of Prime Minister's Rural Housing Scheme

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமரின் கிராம்ப்புற வீட்டுவசதித் திட்டத்தை 2024-25 முதல் 2028-29-ம் நிதியாண்டு வரையிலான நிதியாண்டில் செயல்படுத்தும் ஊரக வளர்ச்சித் துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேலும் இரண்டு கோடி வீடுகள் கட்டுவதற்கு நிதியுதவி அளிக்கப்படும். 

2024-25 முதல் 2028-29 வரையிலான நிதியாண்டிற்கான மொத்த ஒதுக்கீடு 3,06,137 கோடி ரூபாய். இதில் மத்திய அரசின் பங்கு 2,05,856 கோடி ரூபாய், மாநில அரசின் பங்களிப்பு 1,00,281 கோடி ரூபாய் ஆக இருக்கும்.

மாற்றியமைக்கப்பட்ட விலக்கு அளவுகோல்களைப் பயன்படுத்தி தகுதியான கிராமப்புற குடும்பங்களை அடையாளம் காண ஆவாஸ்+ பட்டியலைப் புதுப்பித்தல்.

பயனாளிகளுக்கான உதவித் தொகை சமவெளிப் பகுதிகளில் தற்போதுள்ள விகிதங்களில் ரூ.1.20 லட்சமாகவும், வடகிழக்கு மண்டலம் / மலை மாநிலங்களில் ரூ.1.30 லட்சமாகவும் தொடரும்.

திட்ட நிதிகளில் 2% நிர்வாக நிதிகள் 1.70% மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் 0.30% மத்திய அளவில் தக்கவைக்கப்பட வேண்டும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel