ஆண்கள் பாரா ஜூடோவில் 60 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய வீரர் கபில் பர்மார், பிரேசிலின் எலிடன் டி ஒலிவெய்ராவை எதிர்கொண்டார். இதில் கபில் பர்மார் 10க்கு பூஜ்ஜியம் என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். இது பாராலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் ஜூடோவில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் ஆகும்.
ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் டி-64 பிரிவில் இந்திய வீரர் பிரவீன் குமார் பங்கேற்றார். இவர் இலக்கை விட கூடுதலாகச் சென்று 2.08 மீட்டர் உயரம் தாண்டினார். இது புதிய ஆசிய சாதனையாகவும் மாறியுள்ளது.
சரத் குமார், மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் ஏற்கெனவே பதக்கங்களை வென்றுள்ள நிலையில், பிரவீன் குமார் மூலம் 3வது பதக்கம் கிடைத்துள்ளது. தற்போதுவரை 6 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் உள்பட 26 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
0 Comments