2023-24 நிதியாண்டில் சாதனை உற்பத்தி அளவை எட்டிய பின்னர், நாட்டில் சில முக்கிய தாதுக்களின் உற்பத்தி 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) தொடர்ந்து வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. மதிப்பு அடிப்படையில் மொத்த கனிம உற்பத்தியில் இரும்புத் தாது சுமார் 70% ஆகும்.
2023-24 நிதியாண்டில் இரும்புத்தாது உற்பத்தி 274 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது. 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) 108 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த இரும்புத் தாது உற்பத்தி, 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) தற்காலிக தரவுகளின்படி, 116 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
இது ஆரோக்கியமான 7.4% வளர்ச்சியைக் காட்டுகிறது. மாங்கனீசு தாது உற்பத்தி 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) 15.4% அதிகரித்து 1.5 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
இரும்பு அல்லாத உலோகத் துறையில், 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) அலுமினிய உற்பத்தி கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 1.3% அதோகரிப்பைப் பதிவு செய்தது.
இது 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) 17.26 லட்சம் டன் என்பதிலிருந்து 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) 17.49 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்தி 1.91 லட்சம் டன்னிலிருந்து 2.02 லட்சம் டன்னாக 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்தியில் முதல் 10 இடங்களில் உள்ள இந்தியா, உலகின் 2வது பெரிய அலுமினிய உற்பத்தியாளராகவும், 4வது பெரிய இரும்புத் தாது உற்பத்தியாளராகவும் உள்ளது.
0 Comments