உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா கண்காட்சி அரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று செமிகான் இந்தியா 2024-ஐ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை திரு மோடி பார்வையிட்டார்.
செப்டம்பர் 11 முதல் 13 வரை நடைபெறும் இந்த மூன்று நாள் மாநாடு, இந்தியாவை குறைகடத்திகளுக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதற்கான இந்தியாவின் குறைக்கடத்தி உத்தி மற்றும் கொள்கையை வெளிப்படுத்தும்.
0 Comments