பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் செப்டம்பர் 24, 2024 அன்று புதுதில்லியில் இந்திய கடலோரக் காவல்படை (ஐசிஜி) தளபதிகள் மாநாட்டின் 41வது பதிப்பை திறந்து வைத்தார்.
வளர்ந்து வரும் புவிசார் அரசியல் நிலப்பரப்புகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு சிக்கல்களின் பின்னணியில் உத்திசார், செயல்பாட்டு மற்றும் நிர்வாக விஷயங்களில் அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபட இந்திய கடலோரக் காவல்படை தளபதிகளுக்கு இந்த மூன்று நாள் கூட்டம் ஒரு முக்கிய மன்றமாக செயல்படுகிறது.
மாநாட்டின் போது, ஐ.சி.ஜி தளபதிகள், பாதுகாப்புப் பணியாளர்களின் பிரதிநிதி, கடற்படை அதிகாரிகள் மற்றும் தலைமைப் பொறியியலாளர் ஆகியோருடன் கலந்துரையாடுவார்கள்.
கடல்சார் பாதுகாப்பின் முழு வீச்சிலும் சேவைகளிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக இந்த விவாதங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் கடலோரக் காவல்படையின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மேம்படுத்துகின்றன.
0 Comments