Recent Post

6/recent/ticker-posts

54-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் / 54th GST Council Meeting

54-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் / 54th GST Council Meeting

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54-வது கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், கோவா மற்றும் மேகாலயா மாநிலங்களின் துணை முதல்வர்களும், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் நிதியமைச்சர்களும், மத்திய மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 

அதாவது ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைக்கு இப்போதைக்கு 18% வரி இல்லை என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தணைக்கு 18% வரிவிதிக்க வேண்டும் என்ற முன்மொழிவு குறித்து மேலும் விரிவாக ஆலோசிக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் பிட்பமண்ட் (fitment) கமிட்டிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார்.

இதேபோல் மத கரணங்களுக்காக இயக்கப்படும் ஹெலிகாப்டர்களுக்கு ஜிஎஸ்டி 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, மருத்துவக் காப்பீடு தவணைக் கட்டணம் மீதான ஜிஎஸ்டியை குறைத்தல் அல்லது அந்த ஜிஎஸ்டியை செலுத்துவதில் இருந்து மூத்த குடிமக்கள் போன்றவா்களுக்கு விலக்களிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel