Recent Post

6/recent/ticker-posts

BEST TOURIST VILLAGES COMPETITION 2024 / சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டி 2024

BEST TOURIST VILLAGES COMPETITION 2024
சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டி 2024 

BEST TOURIST VILLAGES COMPETITION 2024 / சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டி 2024

TAMIL

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இன்று (27.09.2024) சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டி 2024-ல் வெற்றி பெற்ற கிராமங்களை மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் அறிவித்தது.

இந்தியாவின் ஆன்மாவான கிராமங்களில் சுற்றுலாவை மேம்படுத்த, சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டி 2023-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

சமூக அடிப்படையிலான மதிப்புகள், அனைத்து அம்சங்களிலும் நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பு, கலாச்சாரம், இயற்கை வளங்களைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் கிராமங்களை அடையாளம் கண்டு அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும்.

2023-ம் ஆண்டில் சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டியின் முதல் பதிப்பில் 795 கிராமங்களிலிருந்து விண்ணப்பங்கள் வந்தன. சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டியின் இரண்டாவது ஆண்டில், 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்து மொத்தம் 991 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 8 பிரிவுகளின் 36 கிராமங்கள் சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டியில் வெற்றியாளர்களாக அங்கீகரிக்கப்பட்டன.

வெற்றியாளர்கள்

  1. துத்மராஸ் - சத்தீஸ்கர் - சாகச சுற்றுலா
  2. அரு - ஜம்மு & காஷ்மீர் - சாகச சுற்றுலா
  3. குத்தலூர் - கர்நாடக - சாகச சுற்றுலா
  4. யாக்கோல் - உத்தரகண்ட் - சாகச சுற்றுலா
  5. குமரகம் - கேரளா - வேளாண் சுற்றுலா
  6. கார்டே - மகாராஷ்டிரா - வேளாண் சுற்றுலா
  7. ஹன்சாலி - பஞ்சாப் - வேளாண் சுற்றுலா
  8. சூபி - உத்தரகண்ட் - வேளாண் சுற்றுலா
  9. பராநகர் - மேற்கு வங்காளம் - வேளாண் சுற்றுலா
  10. சித்ரகோட் - சத்தீஸ்கர் - சமுதாயம் சார்ந்த சுற்றுலா
  11. மினிக்காய் தீவு - லட்சத்தீவு - சமுதாயம் சார்ந்த சுற்றுலா
  12. சியால்சுக் - மிசோரம் - சமுதாயம் சார்ந்த சுற்றுலா
  13. தியோமாலி - ராஜஸ்தான் - சமுதாயம் சார்ந்த சுற்றுலா
  14. அல்பனா கிராம் - திரிபுரா - சமுதாயம் சார்ந்த சுற்றுலா
  15. சுவால்குச்சி - அசாம் - கலை
  16. பிரான்பூர் - மத்தியப் பிரதேசம் - கலை
  17. உம்டன் - மேகாலயா - கலை
  18. மணியபந்தா - ஒடிசா - கலை
  19. நிர்மல் - தெலுங்கானா - கலை
  20. ஹஃபேஸ்வர் - குஜராத் - பாரம்பரியம்
  21. ஆண்ட்ரோ - மணிப்பூர் - பாரம்பரியம்
  22. மாவ்ப்லாங் - மேகாலயா - பாரம்பரியம்
  23. கீழடி - தமிழ்நாடு - பாரம்பரியம்
  24. புரா மஹாதேவ் - உத்தரப் பிரதேசம் - பாரம்பரியம்
  25. துதானி - தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ - பொறுப்பான சுற்றுலா
  26. கடலுண்டி - கேரளா - பொறுப்பான சுற்றுலா
  27. தார் கிராமம் - லடாக் - பொறுப்பான சுற்றுலா
  28. சபர்வாணி - மத்தியப் பிரதேசம் - பொறுப்பான சுற்றுலா
  29. லாட்புரா காஸ் - மத்தியப் பிரதேசம் - பொறுப்பான சுற்றுலா
  30. அஹோபிலம் - ஆந்திரப் பிரதேசம் - ஆன்மீக மற்றும் ஆரோக்கியம்
  31. பண்டோரா - கோவா - ஆன்மீக மற்றும் ஆரோக்கியம்
  32. ரிக்கியபீடம் - ஜார்கண்ட் - ஆன்மீக மற்றும் ஆரோக்கியம்
  33. மேல்கலிங்கம் பட்டி - தமிழ்நாடு - ஆன்மீக மற்றும் ஆரோக்கியம்
  34. சோமசீலா - தெலுங்கானா - ஆன்மீக மற்றும் ஆரோக்கியம்
  35. ஹர்சில் - உத்தரகண்ட் - துடிப்பான கிராமம்
  36. குஞ்சி - உத்தரகண்ட் - துடிப்பான கிராமம்

ENGLISH

BEST TOURIST VILLAGES COMPETITION 2024: Ministry of Tourism, Government of India announced winners of the Best Tourism Villages Competition 2024, today, on 27th September, 2024, on the occasion of World Tourism Day.

To promote tourism to the Soul of India (India’s villages), the Best Tourism Villages Competition was introduced in 2023. The focus was to identify and recognize villages which preserve and promote cultural and natural assets through community-based values and commitment to sustainability in all aspects.

The first edition of the Best Tourism Villages Competition in 2023 saw applications from 795 villages. In the second edition of the Best Tourism Villages Competition, a total of 991 applications were received from 30 States and UTs, out of which 36 villages were recognized as winners across 8 categories of the Best Tourism Villages competition 2024.

Winners

  1. Dudmaras - Chhattisgarh - Adventure Tourism
  2. Aru - Jammu & Kashmir - Adventure Tourism
  3. Cuddalore - Karnataka - Adventure Tourism
  4. Yakol - Uttarakhand - Adventure Tourism
  5. Kumaragam - Kerala - Agritourism
  6. Garde - Maharashtra - Agritourism
  7. Hansali - Punjab - Agritourism
  8. Subi - Uttarakhand - Agritourism
  9. Paranagar - West Bengal - Agritourism
  10. Chitrakot - Chhattisgarh - Community Based Tourism
  11. Minikai Island - Lakshadweep - Community Based Tourism
  12. Sialchuk - Mizoram - Community Based Tourism
  13. Deomali - Rajasthan - Community Based Tourism
  14. Alpana Gram - Tripura - Community Based Tourism
  15. Suwalkuchi - Assam - Craft
  16. Branpur - Madhya Pradesh - Craft
  17. Umdan - Meghalaya - Craft
  18. Maniabhanda - Odisha - Craft
  19. Nirmal - Telangana - Craft
  20. Hafezwar - Gujarat - Tradition
  21. Andro - Manipur - Tradition
  22. Mawblang - Meghalaya - Tradition
  23. Geezadi - Tamil Nadu - Tradition
  24. Pura Mahadev - Uttar Pradesh - Tradition
  25. Dudhani – Dadra and Nagar Haveli and Daman and Diu – Responsible Tourism
  26. Cuddalundi - Kerala - Responsible Tourism
  27. Thar Village - Ladakh - Responsible Tourism
  28. Sabarwani - Madhya Pradesh - Responsible Tourism
  29. Ladpura Khas - Madhya Pradesh - Responsible Tourism
  30. Ahobilam - Andhra Pradesh - Spirituality and Health
  31. Pandora - Goa - Spirituality and Health
  32. Rikhya Peedam - Jharkhand - Spiritual and Health
  33. Melkalingam Patti - Tamil Nadu - Spiritual and Health
  34. Someseela - Telangana - Spirituality and Health
  35. Harsil - Uttarakhand - Vibrant village
  36. Kunchi - Uttarakhand - Vibrant village

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel