மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி முன்னிலையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா இன்று புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில், உலகளாவிய உணவு ஒழுங்குமுறை உச்சி மாநாடு 2024-ன் இரண்டாவது பதிப்பைத் தொடங்கி வைத்தார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இந்த உச்சிமாநாடு, உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்படும் உலக உணவு இந்தியா 2024 நிகழ்வுக்கு இடையே நடத்தப்படுகிறது.
உணவு மதிப்புச் சங்கிலி முழுவதும் உணவு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்த நுண்ணறிவுகளைப் பரிமாறிக் கொள்வதற்கான உலகளாவிய தளத்தை நிறுவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
0 Comments