சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்துக்குள்பட்ட கீழடி, கொந்தகை ஆகிய இடங்களில், பத்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளை, அகழ்வாராய்ச்சி தளத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கி.பி. 17 ஆம் நூற்றாண்டு புழக்கத்தில் இருந்த தென் இந்திய தங்க காசு என சொல்லப்படும் இந்த தங்க நாணயத்தின் ஒரு பக்கத்தில், 6 இதழ் கொண்ட பூ வடிவமும், மற்றொரு பக்கத்தில் கோடுகளால் அலங்கறிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கீழடி அகரம் பகுதியில் நடைபெற்ற 6 ஆம் கட்ட அகழாய்வு பணியின் போது கி.பி. 17 ஆம் நூற்றாண்டு புழக்கத்தில் இருந்த தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments