Recent Post

6/recent/ticker-posts

பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம் – IV செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves implementation of Prime Minister's Rural Roads Scheme – IV

பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம் – IV செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves implementation of Prime Minister's Rural Roads Scheme – IV

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், "2024-25 முதல் 2028-29 நிதியாண்டில் பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம்-IV (PMGSY-IV)" -ஐ செயல்படுத்துவதற்கான ஊரக வளர்ச்சித் துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சாலை வசதி இல்லாத, தகுதி வாய்ந்த 25,000 குடியிருப்புகளுக்கு புதிய இணைப்புச் சாலைகள் அமைக்கவும், புதிய இணைப்புச் சாலைகளில் பாலங்கள் கட்டுதல் / மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக 62,500 கி.மீ. நீளமுள்ள சாலைகள் அமைக்க நிதியுதவி வழங்கப்படும். 

இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.70,125 கோடியாகும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.70,125 கோடி (மத்திய அரசின் பங்கு ரூ.49,087.50 கோடி மற்றும் மாநில பங்கு ரூ.21,037.50 கோடி).

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel