இந்திய ஆட்சிப்பணியின், ஒடிசா கேடரின் 1987 தொகுதி அதிகாரியான திரு ராஜேஷ் வர்மா, தலைநகர் தில்லி பிராந்தியம் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் காற்று தர மேலாண்மை ஆணையத்தின் புதிய முழுநேர தலைவராக இன்று பொறுப்பேற்றார்.
திரு. வர்மா பதவியேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டு காலத்திற்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை, இதில் எது முந்தையதோ அந்தக் காலம் வரை பணியில் இருப்பார். பொது நிர்வாகத்தில் மூன்றரை தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமும், நிபுணத்துவமும் கொண்டவர் ஆவார் அவர்.
0 Comments