தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம், தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று பெரிய திட்டங்களின் கீழ் சந்தா செலுத்திய சந்தாதாரர்களின் எண்ணிக்கையைப் பயன்படுத்தி, முறைசார் துறையில் செப்டம்பர் 2017 வரையிலான வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
ஆகஸ்ட் 2024 மாதத்தில் புதிய இபிஎப் (வைப்பு நிதி) சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 9,30,442 ஆகும். இது ஜூலை 2024 மாதத்தில் 10,99,363 ஆக இருந்தது.
ஆகஸ்ட் 2024 மாதத்தில் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் புதிதாக பதிவு செய்யப்பட்ட மற்றும் பங்களிப்பு செலுத்துவோர் 14,97,146 ஆகும், இது ஜூலை 2024 மாதத்தில் 16,84,764 ஆக இருந்தது.
ஆகஸ்ட் 2024 மாதத்தில் புதிய முறையில் பங்களிப்பு செலுத்தும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 54,869 ஆகும், இது ஜூலை 2024 மாதத்தில் 62,880 ஆக இருந்தது.
0 Comments