ஐரோப்பிய நாடான ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ், மூன்று நாள் அரசு முறைப்பயணமாக டில்லி வந்துள்ளார். இந்தியா - ஜெர்மனி அரசுகளுக்கு இடையிலான 7வது ஆலோசனைக் கூட்டத்தில் இருதலைவர்களும் பங்கேற்று பேசினர்.
இந்த சந்திப்பின் போது மொத்தம் 18 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில், குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் மற்றும் வகைப்படுத்தப்பட்ட தகவல் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.
பாதுகாப்பு துறைகளில் இருநாடுகள் இடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு வளர்ந்து வரும் நேரத்தில், தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் புதிய கதவுகளை திறந்துள்ளன.
இரு நாட்டு மாணவர்களின் இரட்டை பட்டப்படிப்பு திட்டத்துக்காக சென்னை - ஐ.ஐ.டி., - டிரெஸ்டென் பல்கலை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
0 Comments