சர்வதேச டி20 போட்டிகளில் கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட அர்ஷ்தீப் சிங், சிக்கந்தர் ராஸா, டிராவிஸ் ஹெட் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் இந்த விருதுக்கான போட்டியில் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை வெற்றியாளராக ஐசிசி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் 18 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அர்ஷ்தீப் சிங், 36 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார். சர்வதேச டி20 போட்டிகளில் ஓராண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 4-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
அதிலும், குறைந்த போட்டிகளில் இந்த சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். மற்ற வீரர்கள் இந்த சாதனையைப் படைக்க அதிக போட்டிகளை எடுத்துக் கொண்டுள்ளனர்.
0 Comments