ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் "செழிப்பான ஒடிசா-ஒடிசாவில் தயாரிங்கள்" (உத்கர்ஷ் ஒடிசா – மேக் இன் ஒடிசா) மாநாடு 2025 மற்றும் ஒடிசாவில் தயாரியுங்கள் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
வளமான ஒடிசா – ஒடிசாவில் தயாரிப்போம் -2025 மாநாடு என்பது ஒரு முதன்மை உலகளாவிய முதலீட்டு உச்சி மாநாடு ஆகும். இது ஒடிசா அரசால் நடத்தப்படுகிறது.
இது கிழக்குப் பிராந்தியத் தொலைநோக்கில், இந்தியாவின் முன்னணி முதலீட்டு இலக்கு மற்றும் தொழில்துறை மையமாக மாநிலத்தை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
துடிப்பான தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் மாநிலத்தின் சாதனைகளை எடுத்துரைக்கும் ஒடிசாவில் தயாரிப்போம் கண்காட்சியையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த மாநாடு ஜனவரி 28 முதல் 29 வரை இரண்டு நாட்கள் நடைபெறும்.
தொழில்துறை தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒடிசா ஒரு விருப்பமான முதலீட்டு இடமாக வழங்கும் வாய்ப்புகளை ஒன்றிணைத்து விவாதிக்க இது ஒரு தளமாக செயல்படும்
0 Comments