அமெரிக்காவில் கடந்த 2024 நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி, பதவியேற்பு விழா நடைபெற்றது.
பதவியேற்ற பிறகு, அதிபர் ட்ரம்ப் உணர்ச்சி பொங்க உரையாற்றினார். அடுத்த 4 ஆண்டுகளில் அவர் மேற்கொள்ள உள்ள திட்டங்களை அறிவித்தார்.
இந்நிலையில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை இரண்டாவது முறையாக விலக்கிக் கொள்வதற்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இதைத் தொடர்ந்து, காலநிலை மாற்றத்திற்கு காரணமான பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் 2015-ம் ஆண்டு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான தனது நோக்கத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்து, டொனால்டு டிரம்ப் ஒரு முறையான கடிதத்தில் கையெழுத்திட்டார்.
இது மட்டும் இல்லாமல் டொனால்டு டிரம்ப் செவ்வாய் கிரகத்தில் நட்சத்திரங்களையும் கோடுகளையும் நடுவதற்கு அமெரிக்க விண்வெளி வீரர்களை அனுப்புவோம்,
அமெரிக்காவின் தென் எல்லைகளில் அவசர நிலை, அமெரிக்காவில், ஆண், பெண் என்ற 2 பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும், மின்சார வாகனங்கள் கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ் பெறப்படும் என்ற அறிவிப்புகளை அறிவித்தார்.
0 Comments