சிவகளையில் தமிழ்நாடு தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் வாள்கள், கத்திகள், அம்பு முனைகள், மோதிரங்கள், உளிகள் மற்றும் கோடாரிகள் என 85-க்கும் மேற்பட்ட இரும்பு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இவற்றின் காலத்தை கண்டறிய முதற்கட்ட கார்பன் ஆய்வுக்கு உட்படுத்திய போது, சிவகளையில் கிடைத்த இரும்பின் காலம் கிமு 3ஆயிரத்து 345 என்பது தெரியவந்தது.
இதை உறுதி செய்வதற்காகவும், மேலும் தெளிவான கணக்கீடுகளைப் பெறுவதற்காகவும், லக்னோ மற்றும் அகமதாபாத்தில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்திற்கும் இரும்பு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த 3 ஆய்வகங்களிலும் கிடைத்த முடிவுகள் பெரிய அளவில் வித்தியாசமின்றி இருந்தது முக்கியத்துவம் பெற்றதாக மாறியது.
இரண்டாம் கட்ட இந்த ஆய்வுகளின் அடிப்படையில், சிவகளையில் கிடைத்த இரும்பின் காலம் கி.மு. 3 ஆயிரத்து 345 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் இறுதி கணக்கீட்டின் படி, சிவகளையில் கிடைத்த இரும்பின் காலம் 5 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது ஆய்வுகளின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
0 Comments