Recent Post

6/recent/ticker-posts

தரவு தகவலியல் மற்றும் புத்தாக்கப் பிரிவு மற்றும் இந்திரபிரஸ்தா தகவல் தொழில்நுட்பக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Data Informatics and Innovation Division and Indraprastha Information Technology Corporation

தரவு தகவலியல் மற்றும் புத்தாக்கப் பிரிவு மற்றும் இந்திரபிரஸ்தா தகவல் தொழில்நுட்பக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Data Informatics and Innovation Division and Indraprastha Information Technology Corporation

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவு தகவலியல் மற்றும் புத்தாக்கப் பிரிவுக்கும் இந்திரபிரஸ்தா தகவல் தொழில்நுட்பக் கழகத்துக்கும் (ஐஐஐடி-தில்லி) இடையே தரவு கண்டுபிடிப்பு ஆய்வக முன்முயற்சியின் கீழ் 30.01.2025 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கடந்த ஓராண்டில் தேசிய புள்ளியியல் முறையை நவீனப்படுத்த அமைச்சகம் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. 2024-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமைச்சகம் புதுமைகளை புகுத்துவதற்கும், ஆராய்ச்சி சார்ந்த தீர்வுகளுக்கான சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் தரவு கண்டுபிடிப்பு ஆய்வக முன்முயற்சிக்கான திட்டத்தைத் தொடங்கியது.

தரவு சேகரிப்பு, செயலாக்கம் மற்றும் பரவலை மேம்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் பேரளவு தரவு பகுப்பாய்வு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான தளமாக ஆய்வகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெளியிடத் தொடர்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஆய்வகம் முதன்மையான கல்வி நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் அணுகப்பட்டுள்ளன. ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்த கூட்டாண்மையின் முக்கிய நோக்கம், கல்வியாளர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் இடையில் ஒரு இணைப்பை உருவாக்குவதன் மூலம் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் உலக சவால்களை சமாளிக்கும் வகையில் கல்வி நிபுணத்துவத்தை மேம்படுத்துவதாகும்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை மேம்படுத்துவதற்கான இந்த கூட்டு முயற்சி மற்றும் கூட்டு அணுகுமுறையில், அமைச்சகம் மற்றும் ஐஐஐடி இடையேயான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கூட்டாண்மை முறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஐஐடி தில்லியுடனான ஒத்துழைப்பு என்பது கண்டுபிடிப்புகளுக்கான சூழல் அமைப்பை உருவாக்குவதில் ஒரு முக்கியமான படியாகும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம், அரசுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் இடையே நீண்டகால ஒத்துழைப்பை வளர்ப்பது மற்றும் அமைப்பில் புதிய யோசனைகளை புகுத்துவது என்ற தனது உறுதிப்பாட்டை மத்திய திட்ட செயலாக்க அமைச்சகம் வலுப்படுத்தியுள்ளது.

இது அமைச்சகத்தின் செயல்பாட்டைக் கணிசமாக மேம்படுத்துவதுடன் நாட்டின் புள்ளியியல் சூழலை வலுப்படுத்தும் வகையில் கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel