இந்திய கடலோரக் காவல்படை மற்றும் இந்தோனேசிய கடலோர காவல்படை ஆகியவற்றுக்கு இடையிலான, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலும் 3 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
புதுதில்லியில் உள்ள கடலோர காவல்படை தலைமையகத்தில் ஜனவரி 27 -ம் தேதி நடைபெற்ற 2-வது உயர்மட்ட கூட்டத்தின் போது, ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.
புரிந்துணர்வு ஒப்பந்த விதிகளின் கீழ் 2025 ஜனவரி 24 முதல் 28 வரை இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணமாக வந்துள்ள எட்டு பேர் கொண்ட குழுவுடன், இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குநர் ஜெனரல் பரமேஷ் சிவமணி மற்றும் இந்தோனேஷிய கடலோர காவல்படையின் தலைவர் வைஸ் அட்மிரல் இர்வன்சியா ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
0 Comments