தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை மற்றும் ஜம்மு-காஷ்மீர் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தப் பிராந்தியத்தில் புத்தொழில்களுக்கான ஒத்துழைப்பு, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீர் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "ஜம்மு காஷ்மீர் கனெக்ட்" என்ற சிறப்பு புத்தொழில் மையப்படுத்தப்பட்ட திட்டத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
சந்தை இணைப்புகள், நிதி நெட்வொர்க்குகள் மற்றும் சர்வதேச விரிவாக்க வாய்ப்புகள் ஆகியவற்றில் இந்த ஒப்பந்தம் கவனம் செலுத்துகிறது. இது 2047க்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் பார்வையுடன் ஒத்துப்போகிறது.
0 Comments