Recent Post

6/recent/ticker-posts

சஞ்சய் – போர்க்கள கண்காணிப்பு அமைப்பை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார் / Sanjay – Defence Minister Rajnath Singh flags off Battlefield Surveillance System

சஞ்சய் – போர்க்கள கண்காணிப்பு அமைப்பை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார் / Sanjay – Defence Minister Rajnath Singh flags off Battlefield Surveillance System

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (2025 ஜனவரி 24) புதுதில்லியின் சௌத் பிளாக்கில் 'சஞ்சய் - போர்க்கள கண்காணிப்பு அமைப்பு (BSS)'-ஐ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சஞ்சய் என்பது ஒரு தானியங்கி அமைப்பாகும். இது அனைத்து தரை, வான்வழி போர்க்கள சென்சார்களிலிருந்து உள்ளீடுகளை பெற்று ஒருங்கிணைக்கிறது.

அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த அவற்றை செயலாக்குகிறது. பாதுகாப்பான ராணுவ தரவு கட்டமைப்பு, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் போர்க்களத்தின் பொதுவான கண்காணிப்பு படத்தை உருவாக்க அவற்றை இணைக்கிறது.

இது போர்க்கள வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதோடு, மையப்படுத்தப்பட்ட வலை பயன்பாட்டின் மூலம் எதிர்கால போர்க்கள செயல்பாடுகளுக்கு உதவும்.

பிஎஸ்எஸ் அமைப்பானது அதிநவீன சென்சார்கள், அதிநவீன பகுப்பாய்வுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பரந்து விரிந்த நில எல்லைகளைக் கண்காணித்து, ஊடுருவல்களைத் தடுத்து, அதிக துல்லியத்துடன் சூழ்நிலைகளை மதிப்பீடு செய்யும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel