சுதந்திர நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்ட முதல் மாநிலமாக உத்தரகண்ட் மாறியிருக்கிறது. உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பொது சிவில் சட்டத்தின் அரசாணையை வெளியிட்டதோடு, பொது சிவில் சட்ட விதிகளை அறிமுகப்படுத்தி, பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தது தொடர்பான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
மாநிலத்தின் மிக முக்கிய நிகழ்ச்சி, முதல்வர் தாமியின் அதிகாரபூர்வ இல்லமான முக்ய சேவக் சதன் அரங்கில் நடைபெற்றது. இதில், உத்தரகண்ட் அமைச்சர்கள் மற்றும் பல மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
0 Comments