இந்தியக் கடலோர காவல்படைக்கு மென்பொருளால் இயக்கப்படும் 149 வானொலிகளை கொள்முதல் செய்ய பெங்களுருவில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்துடன் ரூ. 1220.12 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில பாதுகாப்பு அமைச்சகம் இன்று (2025 பிப்ரவரி 20) கையெழுத்திட்டுள்ளது.
இந்த நவீன வானொலிகள் அதிவேக தரவு மற்றும் உறுதியான குரல் தொடர்பு மூலம் பாதுகாப்பான, நம்பகமான தகவல் பகிர்வு, ஒத்துழைப்பு, சூழ்நிலை சார்ந்த விழிப்புணர்வு தகவலைப் பெற உதவும்.
கடல்சார் சட்ட அமலாக்கம், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், மீன்பிடிப்பு பாதுகாப்பு, கடல்சார் சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட இந்தியக் கடலோர காவல்படையின் முக்கியமான பொறுப்புகள் நிறைவேற்றப்படும் திறனை இவை வலுப்படுத்தும்.
மேலும், இந்தியக் கடற்படையுடன் கூட்டுச் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் இந்த வானொலிகள் உதவும்.
0 Comments