டி20 உலகக்கோப்பையை வெல்ல உலகில் உள்ள 16 நாடுகளான மலேசியா, இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஸ்காட்லாந்து, சமோவா, பாகிஸ்தான், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நேபாளம், நைஜீரியா முதலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்நிலையில் கோப்பை வெல்வதற்கான இறுதிப்போட்டியானது மலேசியாவில் பரபரப்பாக தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வுசெய்து விளையாடியது.
ஆனால் இந்திய ஸ்பின்னர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத தென்னாப்பிரிக்கா பேட்டர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.
இந்திய ஸ்பின்னர்கள் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்த 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்கா 82 ரன்களே சேர்த்தது.
நடப்பு உலகக்கோப்பை சாம்பியனான இந்திய அணி மீண்டும் கோப்பையை தக்கவைத்துகொள்ள 83 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடியது. எளிதான இலக்கை துரத்திய இந்திய வீரர்கள் 11.2 ஓவரில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தனர்.
யு19 மகளிருக்கான டி20 உலகக்கோப்பை முதல்முறையாக கடந்த 2022-23ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நிலையில், அதில் இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றியது ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி.
இந்த நிலையில் இரண்டாவது முறையாக நடைபெற்ற யு19 மகளிர் டி20 உலகக்கோப்பையையும் வென்று தொடர்ச்சியாக இரண்டு முறை உலகக்கோப்பையை வென்று மகுடம் சூடியுள்ளது இந்திய அணி.
0 Comments