அசாம் மாநிலம் குவஹாத்தியில் அசாம் அனுகூலம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சிமாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (25.02.2025) தொடங்கி வைத்தார்.
அசாம் அனுகூலம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சி மாநாடு 2025 குவஹாத்தியில் பிப்ரவரி 25 முதல் 26 வரை நடைபெறுகிறது. இது தொடக்க அமர்வு, ஏழு அமைச்சக அமர்வுகள் மற்றும் 14 கருப்பொருள் அமர்வுகளை உள்ளடக்கியதாகும்.
தொழில்துறை பரிணாமம், உலகளாவிய வர்த்தக கூட்டாண்மை, வளர்ந்து வரும் தொழில்கள் மற்றும் 240 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களைக் கொண்ட துடிப்பான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மாநிலத்தின் பொருளாதார நிலப்பரப்பை விளக்கும் ஒரு விரிவான கண்காட்சியும் இதில் அடங்கும்.
பல்வேறு சர்வதேச அமைப்புகள், உலகளாவிய தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை நிபுணர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கின்றனர்.
0 Comments