Recent Post

6/recent/ticker-posts

ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி 7.21% அதிகரிப்பு / Overall exports increase by 7.21% during April-January 2024-25

ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி 7.21% அதிகரிப்பு / Overall exports increase by 7.21% during April-January 2024-25

ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி (பொருட்கள் மற்றும் சேவைகள்) 682.59 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஏப்ரல்-ஜனவரி 2023-24-ல் 636.69 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 7.21% வளர்ச்சியாகும்.

இந்தக் காலகட்டத்தில் பொருட்கள் ஏற்றுமதியின் ஒட்டுமொத்த மதிப்பு 358.91 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது ஏப்ரல்-ஜனவரி 2023-24 காலகட்டத்தில் 353.97 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 1.39% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பெட்ரோலியம் அல்லாத பிற ஏற்றுமதிகள் ஏப்ரல் -ஜனவரி 2023-24ல் 283.45பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது ஏப்ரல்-ஜனவரி 2024-25-ல் 305.84 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.

ஜனவரி 2025-ல் மின்னணு பொருட்கள், பொறியியல் பொருட்கள், மருந்துகள், அரிசி, ரத்தினங்கள், நகைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்து காணப்பட்டது.

மின்னணு பொருட்களின் ஏற்றுமதி ஜனவரி 2024-ல் 2.29 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 78.97% அதிகரித்து 2025 ஜனவரியில் 4.11 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.

பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி ஜனவரி 2024-ல் 8.77 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 7.44% அதிகரித்து 2025 ஜனவரியில் 9.42 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

மருந்துகள் ஏற்றுமதி ஜனவரி 2024-ல் 2.13 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 21.46% அதிகரித்து 2025 ஜனவரியில் 2.59 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

அரிசி ஏற்றுமதி ஜனவரி 2024-ல் 0.95 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 44.61% அதிகரித்து 2025 ஜனவரியில் 1.37 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

ரத்தினங்கள், நகைகள் ஏற்றுமதி ஜனவரி 2024-ல் 2.59 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 15.95% அதிகரித்து 2025 ஜனவரியில் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

2025 ஜனவரி மாத்திற்கான மொத்த ஏற்றுமதி (வர்த்தகம், சேவைகள் இணைந்து) 74.97 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2024 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 9.72 சதவீத வளர்ச்சியாகும்

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel