Recent Post

6/recent/ticker-posts

2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) கனிம, இரும்பு அல்லாத உலோக உற்பத்தி அதிகரிப்பு / Increase in mineral and non-ferrous metal production in the financial year 2024-25 (April-January)

2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) கனிம, இரும்பு அல்லாத உலோக உற்பத்தி அதிகரிப்பு / Increase in mineral and non-ferrous metal production in the financial year 2024-25 (April-January)

2023-24-ம் நிதியாண்டில் கனிம வளங்களின் உற்பத்தியில் சாதனைப் படைத்ததற்குப் பிறகு நாட்டில் சில முக்கிய கனிமங்களின் உற்பத்தி நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) தொடர்ந்து வலுவான வளர்ச்சிக் கண்டுவருகிறது.

கனிம உற்பத்தி அதன் மதிப்பின் அடிப்படையில் இரும்புத் தாது 70% ஆகும். 2023-24-ம் நிதியாண்டில் இரும்புத் தாது உற்பத்தி 274 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது.

இரும்புத் தாது உற்பத்தி

தற்காலிக தரவுகளின்படி, இரும்புத் தாது உற்பத்தி 2023-24-ம் நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) 228 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 2024-25-ம் நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) 236 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. 

இது 3.5 சதவீதத்துடன் சீரான வளர்ச்சியைக் காட்டுகிறது. மாங்கனீசு தாது உற்பத்தி 2024-25-ம் நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) 11.1% அதிகரித்து 3.0 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. 

குரோமைட்டின் உற்பத்தி 2024-25-ம் நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) 8.7% அதிகரித்து 2.5 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. கூடுதலாக, பாக்சைட் உற்பத்தியும் 2023-24-ம் நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) 19.5 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) 5.6% அதிகரித்து 20.6 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.

இரும்பு அல்லாத உலோகத் துறை

இரும்பு அல்லாத உலோகத் துறையில், 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) முதன்மை அலுமினிய உற்பத்தி கடந்த ஆண்டு இதே காலகட்டத்தைக் காட்டிலும் 1.2% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 

இது 2024-25-ம் நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) 35.10 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) 34.67 லட்சம் டன்னாக இருந்தது. இதே காலகட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்தி 4.19 லட்சம் டன்னிலிருந்து 4.50 லட்சம் டன்னாக 7.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட தாமிர மற்றும் அலுமினியம் உற்பத்தி

சுத்திகரிக்கப்பட்ட தாமிர மற்றும் அலுமினியம் உற்பத்தியில் உலக அளவில் முதல் 10 இடங்களில் இந்தியா 2-வது இடத்திலும், இரும்புத் தாது உற்பத்தியில் உலகின் 4-வது பெரிய நாடாகவும், இந்தியா உள்ளது. 

நடப்பு நிதியாண்டில் இரும்புத்தாது உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தொடர் வளர்ச்சிக் காரணமாக எஃகு உலோகத்தின் தேவை அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel