15-வது நிதி ஆணையத்தின் காலகட்டம் வரை ஒருங்கிணைந்த பிரதமரின் விவசாயிகள் வருமான பாதுகாப்பு இயக்கத்தை (அன்னதாதா ஆய் சன்ரக்ஷன் அபியான் -PM-AASHA) அதாவது 2025-26 வரை தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஒருங்கிணைந்த பிரதமரின் ஆஷா திட்டம், கொள்முதல் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் அதிக செயல்திறனை ஏற்படுத்தும்.
இது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை வழங்க உதவுவது மட்டுமல்லாமல், நுகர்வோருக்கு மலிவு விலையில் அத்தியாவசி வேளாண் விளைபொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும்.
உள்நாட்டு பருப்பு உற்பத்தியை மேம்படுத்துவதில் பங்களிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கவும், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், 2024-25 கொள்முதல் ஆண்டில் உற்பத்தியில் 100% க்கு சமமான அளவில் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுந்து, மசூர் ஆகியவற்றை கொள்முதல் செய்ய அரசு அனுமதித்துள்ளது.
0 Comments